அன்பு
எழுதியவர்: சுயம்புலிங்கம்
எழுதியவர்: சுயம்புலிங்கம்
அன்பு!!
அதுதான் அவனுடைய பெயரும் கூட! பெயருக்கு ஏற்றார் போல எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் கருணையுடனும் பணிவுடன் நடந்துகொள்வான்.
அதனாலேயே அன்பு, பள்ளிக்கூட நண்பர்கள் அண்டை வீட்டுக்காரர்கள் என எல்லோராலும் விரும்பப்படும் ஒரு நபராக இருந்தான்.
கண்மணியும் அவனுடைய பக்கத்து வீட்டில் தான் இருந்தாள் இருவரும் நல்ல நண்பர்கள்.
வயதானவர்கள் கண் தெரியாதவர்களுக்கெல்லாம் சாலையை கடக்க உதவிசெய்வான். சில சமயங்களில் அவர்கள் வேண்டும் பொருட்களை கடையில் வாங்கிகொடுத்து உதவி செய்வான்.
ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய்க்குட்டி சாலையில் அடிபட்டு கிடந்ததை பார்த்தான். உடனே அதை மார்போடு அனைத்து எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அவனுடைய தாத்தா என்ன ஆயிற்று இந்த நாய்க்குட்டிக்குஎன்று கேட்டார்.சாலையில் அடிபட்டு கிடந்தது. அதனால் நடக்க முடியவில்லை. எனவேஎடுத்துக் கொண்டு வந்தேன் தாத்தா என்றான். உடனே தாத்தா இந்தக் குட்டி நாயின்காலில் மிகவும் அடிபட்டுள்ளது அதற்கு ஒரு மஞ்சள் பத்து வைத்து வெள்ளை துணியால்கட்டினால் சரியாகிவிடும். ஒரிரு நாட்கள் ஆகும் என்றார்.
இதை உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த பாட்டி ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் பத்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். மூவருமாக சேர்ந்து அந்த நாய்க்குட்டியின் காலில் மஞ்சள் பத்து போட்டு வெள்ளை துணி வைத்து கட்டி விட்டனர். பிறகு பாட்டி அந்த நாய்க்குட்டிக்கு சாப்பிட உணவு கொடுத்தார். அன்பு தாத்தாவிடம் இந்த நாய்க்குட்டிக்கு குணமாகும் வரை நம்மிடமே இருக்கட்டுமே என்றான். அதற்குள் பாட்டி இதனுடைய அம்மா இதை தேடினால்என்ன செய்வது? இதைப் பற்றி யோசித்தாயா அன்பு என்று கேட்டார். அன்பும் அதனுடைய அம்மா இதை தேடும் அல்லவா அதை பற்றி நான் யோசிக்கவே இல்லையே பாட்டி என்றுகூறினான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் வீட்டின் வெளியே ஒரு நாய் குறைக்கும் சத்தம் கேட்டது மூவரும் வெளியே வந்து பார்த்தனர் அந்த குட்டி நாயின் அம்மாதான் என்று நினைக்கிறேன் என்றார் பாட்டி அதற்கு ஏற்றார் போல் அந்த நாயை பார்த்ததும்குட்டி நாயும் நொண்டி நொண்டி அதன் அருகில் போய் சென்றது. பாட்டி அதற்கும் சிறிதுஉணவு கொடுத்தார். அன்று இரவு முழுவதும் குட்டி நாயும் தாய் நாயும் அவர்கள் வீட்டுவாசலிலேயே இருந்தது. அடுத்த நாள் தாத்தா அந்த கட்டை அவிழ்த்து மீண்டும் ஒரு புதுமஞ்சள் பத்து போட்டு விட்டார் அந்த குட்டி நாய்க்கு ஓரிரு நாட்களில் உடல்நிலைசரியானது பிறகு தாயும் குட்டியும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். விபத்து நடந்த அன்றைய தினம் தலைமை ஆசிரியர் சாலையில் நிகழ்ந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். அடுத்த வாரம் திங்கட்கிழமை காலைபள்ளி அணிவகுப்பில் அனைத்து மாணவர்களும் தேசிய கீதம் வாசித்து முடித்த பிறகு தலைமை ஆசிரியர் அன்பை பற்றி பேசினார் அவன் அந்த நாய்க்குட்டியை காப்பாற்றியதும் அதன் மேல் கருணையுடனும் அன்புடன் இருந்ததையும் பற்றி சொல்லிவிட்டு அனைத்து மாணவர்களும் இதுபோல எல்லா உயிரினங்கள் இடமும் அன்புடனும் கருணையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
அடுத்த பௌர்ணமி அன்று நிலாச்சோறு சாப்பிடும் போது கண்மணி அன்பைப் பற்றியும் அந்த நாய்க்குட்டியை பற்றியும் அவர்கள் குடும்பத்திடம் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டாள் முழு பௌர்ணமி நிலவின் ஒளியில்