கிணறு
Author - Guardian of Knowledge
Author - Guardian of Knowledge
வார்த்தைகள்: 80
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
எங்கள் பண்ணையில் ஒரு ஆழமான கிணறு இருந்தது . எனது தாத்தா வெட்டிய கிணறு . வெடி வைத்து பூமியை பிளந்து வெட்டப்பட்டது.
எண்பது அடி ஆழம் . இது ஒரு அழகிய குளத்திற்கு அருகில் இருந்தது .
மழை காலத்தில் குளம் நிரம்பினால் கிணறும் நிரம்பி விடும் . வெயில் காலத்தில் கிணற்று நீர் குறைந்து பாதாளத்திற்கு சென்று விடும் .
நான் சிறுவனாக இருந்த போது இந்த கிணற்றில் நீச்சல் பழகினேன் . இந்த கிணற்று நீரை விவசாய பயிர்களுக்கு பாய்ச்சினோம் .
கிணற்றை சுற்றி பாம்பேரி சுவர் கட்டப்பட்டிருக்கும் . கிணற்றின் உச்சியில் இருந்து ஆழத்தை பார்க்க பயமாக இருக்கும் .
நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கிணறு ஆழப்படுத்தப்பட்டது . எண்பது அடியில் இருந்து நூறு அடி ஆனது .
பார்ப்பதற்க்கு இன்னும் பயமாக இருந்தது .அடுத்து எப்போ மழை வரும் , நீச்சல் அடிக்கலாம் என ஏங்கி கொண்டிருந்தோம் .