Author - Guardian of Knowledge
வார்த்தைகள்: 80
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
நான் பள்ளிக்கு போகும் போது அம்மா இரண்டு ரூபாய் கொடுப்பாள் . நான் அதை வைத்து தின்பண்டம் வாங்கி உண்பேன் .
எங்கள் பள்ளிக்கு வெளியில் ஒரு கடை இருக்கும் . ஒரு பாட்டி அந்த கடை வைத்திருப்பார் .
அந்த கடையில் எனக்கு பிடித்த நிறைய தின்பண்டம் இருக்கும் . நெல்லிக்காய் , மாங்காய் , கொய்யா , எலந்தை பழம், தேன் மிட்டாய், இன்னும் நிறைய.
அதை நினைக்கும் போதே எச்சில் ஊறும் . தினமும் நான் இரண்டு தின்பண்டம் வாங்குவேன் . ஒரு ரூபாய்க்கு மாங்காய் கீத்து , மீதிக்கு ஒரு கொய்யா பழம் . என் தம்பி பலாப்பழம் , நாவல் பலம் வாங்கி சாப்பிடுவான் .
ஒரு சில நாட்கள் கடலை மிட்டாயும் , தேன் மிட்டாயும் வாங்குவோம் .
அந்த பாட்டி ஒரு நாளும் சாக்லேட் மிட்டாய் , சிப்ஸ் விற்றதில்லை . அவளுக்கு தெரியும் அது நல்லதில்லை என்று .
நான் சிறுவனாக இருந்தாலும் என்னிடம் ஒரு பைசா ஏமாற்றியதில்லை .
என் வாழ்வின் முதல் ஆர்கானிக் கடை அது.