வார்த்தைகள்: 60
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
எங்கள் கிராமத்தில் ஒரு நாடக மேடை இருக்கும் . கோவிலுக்கு நேர் எதிராக கட்டப்பட்டது . சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து நாடகம் பார்க்கலாம் .
எல்லா திருவிழாவிற்கும் நாடகம் போடுவார்கள் . நான் சிறு வயதில் நிறைய நாடகம் பார்த்தேன் .
இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் . விடிய விடிய நடந்து கொண்டே இருக்கும். நான் பாதியிலேயே உறங்கி விடுவேன்.
இதில் வரும் கோமாளி எனக்கு ரொம்ப பிடிக்கும் . கோமாளி வந்தாலே கூட்டத்தில் ஒரே சிரிப்பு.
என் பள்ளி நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முறை நடித்தார்கள் . எனக்கு இன்றும் மறக்க முடியாது.
நாடக நடிகர்கள் மதுரையில் இருந்தே வந்தனர். கண்ணகி சபதம், வள்ளி தெய்வானை போன்ற நாடகங்கள் மறக்க முடியாது.