காரியும் மயிலையும்
Author - Guardian of Knowledge
Author - Guardian of Knowledge
வார்த்தைகள்: 100
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்
என் தாத்தா இரண்டு எருதுகள் வைத்திருந்தார். ஒன்று காரி , கருப்பு நிறத்தில் இருக்கும் . இன்னொன்று மயிலை, வெள்ளை நிறத்தில் இருக்கும்.
பகல் முழுக்க தோட்ட வேலைக்கு உதவி செய்யும். காலை முதல் மதியம் வரை உழுவதற்கு ஏர் இழுக்கும். மதியம் சிறிது ஓய்வு எடுக்கும். மாலை மாட்டு வண்டி இழுக்க உதவும்.
அமைதியான பிராணி . அதன் மூச்சு சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் போடுவதில்லை. மக்காச்சோள தட்டை விரும்பி தின்னும். எங்கள் தாத்தா வைக்கோல் புல்லையும் தீனியாக போடுவார். உத்தியில் பச்சை புல் இருக்கும் காலங்களில் மேய்க்க விடுவார்.
காலை , மதியம், மாலை என மூன்று முறை நீர் அருந்தும். நீண்ட நேரம் உறிஞ்சி உறிஞ்சி குடிக்கும். தொந்தரவு செய்யும் ஈக்களை விரட்ட தனது வாலை சட்டென தன் முதுகில் அடிக்கும். ஈக்கள் பறந்து விடும்.
வெயில் நேரத்தில் மரத்தடியில் கட்டி போட்டு விடுவார். இரவில் கட்டாந்தரையில் கட்டி விடுவார். அயர்ந்து படுத்துக்கொள்ளும்.
இவர்கள் இல்லாமல் பெரும்பாலும் எந்த வேலையும் நடக்காது .