Bicycle - மிதிவண்டி
Author : Sacred Bloom
150 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
Author : Sacred Bloom
150 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
ரவிக்கு நீண்டநாளாக மிதிவண்டி வாங்கவேண்டும் என்று ஆசை. அம்மாவிடமும் , அப்பாவிடமும் மிதிவண்டி வாங்கித் தரும்படி கேட்காத நாளில்லை. ஆனால் அவனுடைய பெற்றோர்களோ அவன் பிறந்தநாளன்று வாங்கித் தருவதாக கூறுவார்கள். ரவியின் பிறந்தநாளுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தது.
ஒருநாள் ரவியின் நண்பன் பரத் புத்தம்புது மிதிவண்டியில் பள்ளிக்கு வந்தான். அதைப் பார்த்த ரவி “அப்பா! என்னை இப்போவே கடைக்கு கூட்டிட்டு போங்க” என்று அடம்பிடித்தான். உடனே அம்மா “உனக்கு ஒரு உண்டியல் வாங்கித் தருகிறேன். நீ எங்களுக்கு உதவி செய்யும்போது , வீட்டு வேலை செய்யும்போது எல்லாம் உனக்கு பணம் தருகிறோம். உண்டியலில் போதிய பணம் சேர்ந்ததும் நீ அதை வைத்து வாங்கிக்கொள்“ என்றார்.
ரவி பெரிய உண்டியல் ஒன்றை வாங்கி அவன் அறையில் வைத்தான். சின்னச் சின்ன வேலைகள் செய்யத் தொடங்கினான். கடையில் வாங்கிய பொருட்களை எடுத்து வர உதவினான். தன்னுடைய வீடு மேலும் பக்கத்து வீட்டாரின் புற்களை வெட்டினான். தங்கைக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாக உண்டியலில் பணம் சேரத் தொடங்கியது. பாத்திரங்கள் கழுவுவது, காய்கறிகள் நறுக்குவது , துணி மடிப்பது இப்படி பல வேலைகள் செய்தான்.
இரண்டே மாதத்தில் உண்டியலிலும் பணம் நிறைந்துவிட்டது. தான் சேமித்த பணத்தில் தனக்கு பிடித்த மிதிவண்டியை வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மீதமுள்ள பணத்தில் தங்கைக்கு ஒரு அழகான பொம்மை வாங்கினான். ரவியின் தாராள குணத்தைக் கண்டு அவனது பெறறோர்கள் அவனைப் பாராட்டினர்.