மலைக்குன்று
Author - Guardian of Knowledge
Author - Guardian of Knowledge
100 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
எங்கள் கிராமத்தின் அருகில் ஒரு மலைக்குன்று இருக்கும் . இதை கரடு என்றும் அழைப்போம். ஊருக்கு ஒரு அடையாளமாக இருக்கும் .
இந்த குன்றின் மேலே செல்வதற்கு ஒரு பாதை இருக்கும். உச்சி வரை செல்ல பத்து நிமிடங்கள் ஆகும் . குழந்தைகள் உச்சிக்கு சென்றால் பயத்துடன் கீழே பார்ப்பார்கள்.
அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் பசுமையாக இருக்கும். அழகிய நெல் வயல் பச்சை பசேல் என்று இருக்கும். தென்னை மரமும், பனை மரமும் சின்னதாக தெரியும். செம்மண் நிலம் கண்ணை பறிக்கும்.
ஆடு மேய்ப்பவர்கள் குன்றுக்கு அருகில் மேய விடுவார்கள். பொழுது போக்காக நிறைய விளையாடுவார்கள். பனை ஓலை மீது உட்காந்து கரட்டில் இருந்து சறுக்கு விளையாடுவார்கள்.
புரட்டாசி மாசம் கரட்டில் இருக்கும் கோவிலில் பூஜை நடக்கும். கிராம மக்கள் சாமி கும்பிட்டு விட்டு அரட்டை அடிப்பார்கள்.
அங்கிருந்து தெரியும் கிராமத்தையும் வயல் வெளியையும் கண்டு களிப்பார்கள் .