விடுமுறை
Author : பனிமலர்
200 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 5 - 7
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
Author : பனிமலர்
200 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 5 - 7
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
இன்று விடுமுறை முடிந்து வீடு திரும்ப வேண்டும். காலையிலே கனியும் கவினும் எழுந்து விட்டார்கள். தங்கள் பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களை எடுத்து வைத்தார்கள். பாட்டி எட்டி பார்த்தார். பாட்டி "என்ன குழந்தைகளா ? இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்டீங்க" என்றார்.
" ஊருக்கு போணும் பாட்டி. என் நண்பர்கள் என் கூட விளையாட காத்திருப்பாங்க" என்றான் கவின். " வீட்ல இருக்கிற என் பொம்மை கூட விளையாடணும் பாட்டி. நான் பள்ளிக்குப் போக போறேன். அதுவும் பள்ளி பேருந்தில் முதல் முறையாக" என்று குதூகலித்தாள் கனி.
பாட்டி உங்களுக்கு தின்பண்டங்கள் செஞ்சு தரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். தாத்தா சிறுகதை புத்தகங்கள் கையில் கொண்டு வந்தார். ஊருக்கு போன பின் தொலைபேசில தவறாம பேசணும் என்றார் தாத்தா. குழந்தைகள் சந்தோஷமாக தலை ஆட்டினர்.
ஊருக்கு வந்ததும் நண்பர்களோடு விளையாட சென்றான் கவின். தன் பொம்மையோடு விளையாடி கொண்டே தூங்கி விட்டாள் கனி. வார இறுதியும் வந்தது. தாத்தா பாட்டியுடன் தொலைபேசியில் (Video Call ) பேசினார்கள். பள்ளியின் முதல் நாள் பற்றியும் பேருந்தில் போவது பற்றியும் கனி கூறினாள். புதிதாக கிடைத்த நண்பர்களோடு விளையாடியதை கவின் சொன்னான்.
பாட்டி ஊர்ல மாடு குட்டி போட்டிருப்பதை சொன்னார். "குட்டிக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க பாட்டி ... கனி கண்ணு குட்டி ன்னு கூப்பிடுவீங்களா" என்றாள். பாட்டி சிரித்துவிட்டு அப்படியே வச்சிரலாம் என்றார்.
தாத்தா தோட்டத்துக்கு போனீங்களா என்று கேட்டான் கவின். கொய்யாவும் மாம்பழமும் நிறைய பறித்துக்கொண்டு வந்தேன் என்றார் தாத்தா. எனக்கு அனுப்பி வைங்க தாத்தா என்றான் கவின். அப்படியே பண்ணிடலாம் என்று தாத்தா சொன்னார்.
பாட்டி! நிலாச்சோறு மொட்டை மாடில சாப்பிட்டோமே அப்போ அங்கே என்னோட பொம்மையை விட்டுட்டேன் என்று கனி சொன்னாள். அதை எடுத்து வச்சிருக்கேன். அடுத்த விடுமுறையில் வரும் பொழுது எடுத்துட்டு போகலாம் என்றார் பாட்டி.
குழந்தைகளுக்கு ஊரில் தோட்டத்தில் விளையாடியதும், பாட்டியின் கையால் நிலா சோறு சாப்பிட்டதும், ஊரில் இருக்கும் கன்னுக்குட்டியும், ஊர் கோயில் யானையும் நினைவில் நின்றன. அடுத்த விடுமுறை எப்பொழுது வரும் என்று நாளேட்டில் குறித்து வைத்தனர். மீண்டும் தாத்தா பாட்டி ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையோடு காத்திருந்தனர்.