வார்த்தைகள்: 65
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
செவலை தைரியம் உள்ளவன். எதையோ தேடி அலைந்து கொண்டே இருப்பான் .
தோட்டம் முழுக்க தனியே சுற்றி வருவான். சில நாட்கள் நீண்ட தூரம் தனியே சென்று திரும்புவான் .
விலங்குகளை கண்டால் வேட்டை குணம் வெளி வரும் .அதுவரை அமைதியாக இருப்பவன் பொங்கி எழுவான்.
முயல் தென்பட்டால் மூச்சு முட்ட துரத்துவான் .
பாம்பை கண்டால் பயம் இல்லாமல் விரட்டுவான். உடும்பை கண்டால் அது மரத்தின் உச்சிக்கு ஓடும் வரை குறைப்பான்.
காட்டுப்பூனை கத்தும் திசை நோக்கி குறைத்து கொண்டே செல்வான் . இவன் வருவதை அறிந்து அவை ஓடி விடும் .
தண்ணீரை கண்டும் அவனுக்கு பயம் இல்லை . மாட்டு பொங்கலுக்கு மாடுகளை போல் செவலையும் குளிப்பாட்டுவோம் . ஒரு முறை அவனை விளையாட்டாக கிணற்றுக்குள் தூக்கி போட்டோம் . அழகாக நீந்தி வெளியே வந்தான் . ஆச்சர்யமாக இருந்தது .
ஆனால் அவன் பயப்படுவது ஒன்றுக்கு மட்டுமே . தீபாவளி அன்று நாங்கள் கொளுத்தும் பட்டாசு சத்தத்திற்கு மட்டுமே .