கொக்கரக்கோ சேவல்
Author : Sacred Bloom
200 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 5 - 7
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
Author : Sacred Bloom
200 வார்த்தைகள்
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 5 - 7
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
ஒரு அழகான பண்ணையில் பெரிய கொட்டகை இருந்தது. அங்கே பல விதமான பண்ணை விலங்குகள் இருந்தன. அதில் நிறைய கோழிகள் இருந்தாலும் ஒரே ஒரு சேவல் மட்டும் தான் இருந்தது. தினமும் காலையில் கூரையின் மேல் ஏறி கொக்கரக்கோ என்று கூவும். அந்த சேவலின் சத்தம் ஊரெல்லாம் கேட்கும்.
மற்ற விலங்குகள் யாருமே சேவலை மதிப்பது இல்லை. ஒன்று கூடி சேவல் ஒரு சோம்பேறி, அதற்கு கத்த மட்டும் தான் தெரியும் என்று ஏளனம் பேசும்.
ஆடுகள் சொல்லும் நாங்கள் பால் தருகிறோம், களைகளை சாப்பிடுகிறோம். நீ என்ன செய்வாய் என்று.செம்மறி ஆடுகளோ உடல் மேலே உள்ள பஞ்சு போன்ற கம்பளியைக் காட்டும்.
நான் கூவினால் தான் எல்லோரும் எழுவார்கள் என்று சேவல் உரக்க சொல்லும்.
பசுக்களோ எங்கள் பால் குடிக்காமல் யாரும் வேலை செய்வது இல்லை என்று தலையை ஆட்டும். பன்றிகள் தன் பங்கிற்கு நீ சத்தம் போட்டால் காதே வெடிக்கும் என்று காதை அடைத்து மண்ணில் புரளும்.
கோழிகள் எல்லாம் தங்கள் வைக்கோல் மெத்தையை காட்டி, நாங்கள் முட்டைகள் இடுவோம். நீ என்ன தான் செய்வாய் என்று பரிகசிக்கும். சேவல் எதுவும் பேசாமல் கூரை மேல் போய் உட்காரும். இப்படியே தினமும் கூரையில் தான் தன் பொழுதைக்கழிக்கும்.
ஒரு நாள் அதிகாலையில் பாம்பு ஒன்று வளைந்து நெளிந்து கொட்டகைக்குள் போவதை சேவல் பார்த்தது. உடனே “பாம்பு! பாம்பு!” என்று கத்த, எல்லா விலங்குகளும் அலறி அடித்து ஓடின.
சேவல் மட்டும் தனியே நின்று பாம்புடன் சண்டை போட்டது. தன் கூர்மையான நகத்தால் பாம்பை கீறியது. தன் அலகால் பாம்பின் கண்களை கொத்திக் கொத்தி விரட்டியது. பாம்பு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. சேவலின் வீரத்தால் கோழி முட்டைகள் மொத்தமும் பத்திரமாய் இருந்தன.
இதை பார்த்த விலங்குகள் ஒவ்வொன்றும் மெதுவாக உள்ளே வந்தன. பாம்புன்னு கேட்டதும் எல்லோரும் பயந்து ஓடிட்டோம். நீ மட்டும் தான் தைரியமாக முட்டைகளையும், எங்களையும் காப்பாற்றினாய் என்று பாராட்டின.
அன்று முதல் சேவலை யாரும் நீ என்ன செய்வாய் என கேட்பதும் இல்லை , ஏளனம் செய்வதும் இல்லை. சேவலிடம் விலங்குகள் நட்போடு பழகின. சேவலும் பெருமையோடு கூரை மேல் ஏறி கொக்கரக்கோ என்று கூவும்.
நீதி: பிறரை ஏளனம் செய்வது தவறு. நம்மை யாரேனும் இழிவாய் பேசினால் வருந்தி இருக்காமல் அவர்கள் புகழும் படி வாழவேண்டும்.