வார்த்தைகள் : 60
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
எங்கள் கிராமம் ஆற்றங்கரை அருகில் இருக்கும் . இந்த ஆற்றின் பெயர் அமராவதி. இது மலையில் இருந்து ஆரம்பிக்கும் . நீண்ட தூரம் சென்று கடலில் கலக்கும்.
மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் . மற்ற காலங்களில் நீரின் அளவு குறைந்து விடும். ஆற்றின் ஓரம் அழகான மரங்கள் இருக்கும்.
ஒரு முறை வெள்ளத்தில் மிருகங்கள் நீந்தி வந்தன . எல்லோரும் அதிசயமாக வேடிக்கை பார்த்தோம்.
குறைவாக நீர் செல்லும் காலங்களில் நாங்கள் நீந்தி விளையாடுவோம்.
மீன் பிடிப்போம். மணலில் வீடு கட்டி விளையாடுவோம். நீர் இல்லாத போது ஒரு அடி தோன்றினால் நீர் வரும். இந்த ஆறு கடலில் கலக்கும் முன் காவிரியில் கலக்கும்.