Author : Sacred Bloom
வார்த்தைகள்: 80
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
கொட்டும் மழையால் வீதி எல்லாம் தண்ணீர். மின் வெட்டு ஆனதால் தொலைக்காட்சி பார்க்கமுடியாது. வீடியோ கேம்ஸும் விளையாட முடியாது.எனக்கு போர் அடிக்குது தாத்தா என்றான் சிதம்பரம். திண்ணையில் உட்கார்ந்து இருந்த தாத்தா யோசித்தார். நேற்று வந்த செய்தித்தாள் கண்ணில் பட்டது. அதை மடித்து கப்பல் செய்து சிதம்பரத்திடம் கொடுத்தார்.
வாசலில் தேங்கிய மழை நீரில் அதை மிதக்கவிட்டான். ஊத ஊத கப்பல் ஆடி அசைந்தது. மழையும் நின்றது மின்சாரமும் வந்தது. ஆனால் சிதம்பரம் வீடியோ கேம்ஸ் விளையாடப் போகவில்லை. காகிதக் கப்பலை இரசித்தபடி வாசலிலேயே இருந்தான்.