Author - Guardian of Knowledge
வார்த்தைகள்: 100
படிக்க தேவைப்படும் நிமிடங்கள்: 3 - 5
படித்து முடித்தவுடன் இந்த படிவத்தைப் (Google Form) பூர்த்தி செய்து உங்களின் கதை வாசிப்பை பதிவு செய்யவும்
நான் என்னோட அப்பாவோட பண்ணையில வளர்ந்தேன். எங்க பண்ணையில இருந்த நாய் பெயர் செவலை.
பகலில் செவலையை சுதந்திரமாக ஓட விட்டு விடுவோம் . இரவில் அவனை ஆட்டுப்பட்டிக்கு அருகில் கட்டிப்போட்டு விடுவோம். இரவில் நரிகள், ஓநாய்களிடம் இருந்து அவன் ஆடுகளைப் பாதுகாப்பான்.
எனது சித்தப்பா வீட்டில் இருந்த நாய் செவலையின் நண்பன் . பகலில் இருவரும் ஒன்றாக இருப்பார்கள். பண்ணையை சுற்றி வருவார்கள். மற்ற நாய்கள் வந்தால் விரட்டி விடுவார்கள்.
செவலை கடமை உணர்ந்தவன் . ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது கூடவே பாதுகாப்பிற்கு செல்வான்.
ஒரு நாள் நான் பைக்கில் செல்வதை செவலை பார்த்து விட்டான். தானும் கூட வர ஆசை பட்டான். சில மைல் தூரம் பைக் பின்னர் ஓடி வந்தான் . பின்னர் முடியாமல் திரும்பி விட்டான்.
அவனை பற்றிய நினைவுகள் இன்னும் என்னிடம் நிறைய உள்ளன . என்னவொரு அன்பான பிராணி.